இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2188ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ، وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ،
قَالَ عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ،
طَاوُسٍ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْعَيْنُ حَقٌّ وَلَوْ
كَانَ شَىْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

கண் திருஷ்டி ஒரு உண்மையாகும். விதியை முந்திக்கொண்டு எதுவும் நிகழுமென்றால், அதை கண் திருஷ்டியே முந்திக்கொள்ளும். மேலும், (கண் திருஷ்டி நீங்குவதற்காக) குளிப்பாட்டும்படி நீங்கள் கேட்கப்பட்டால், (அவ்வாறு) குளிப்பாட்டுங்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح