حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَبِيبَةَ الطَّائِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَثَلُ الَّذِي يُعْتِقُ عِنْدَ الْمَوْتِ كَمَثَلِ الَّذِي يُهْدِي إِذَا شَبِعَ .
அபுத்தர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரணத் தறுவாயில் (தன்னுடைய உடைமைகளின் மீதான முழு உரிமை நீங்கவிருக்கும் நிலையில்) ஓர் அடிமையை விடுதலை செய்பவனின் உவமையாவது, வயிறு நிரம்பிய பிறகு (தனக்குத் தேவைப்படாத ஒன்றை) பரிசளிப்பவனின் உவமையைப் போன்றதாகும்.