அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: குறைஷி இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விதியைப் பற்றி விவாதிப்பதற்காக வந்தார்கள். அப்போது இவ்வசனம் அருளப்பட்டது: "அவர்கள் தங்கள் முகங்கள் குப்புற நரக நெருப்பில் இழுத்துச் செல்லப்படும் நாளில், '(நரகத் தீயான) சகரின் தீண்டலைச் சுவையுங்கள்!' (என்று கூறப்படும்). நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் ஒரு அளவின்படியே படைத்திருக்கிறோம்." (அல்குர்ஆன் 54:48-49)