இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் (இன்று) இரவு கனவில் நிழல் தரும் ஒரு மேகத்தைக் கண்டேன். அதிலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக் கொண்டிருந்தன. மக்கள் அதைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொள்வதைக் கண்டேன். அவர்களில் அதிகமாக எடுத்துக் கொண்டவரும் உண்டு; குறைவாக எடுத்துக் கொண்டவரும் உண்டு. மேலும், பூமியிலிருந்து வானம் வரை இணைக்கப்பட்ட ஒரு கயிற்றைக் கண்டேன். நீங்கள் (நபி (ஸல்) அவர்கள்) அதைப் பிடித்து மேலே சென்றதை நான் கண்டேன். பிறகு வேறொருவர் அதைப் பிடித்து மேலே சென்றார். பிறகு வேறொருவர் அதைப் பிடித்து மேலே சென்றார். பிறகு வேறொருவர் அதைப் பிடித்தார்; அது அறுந்துவிட்டது; பின்னர் அது இணைக்கப்பட்டது" என்று கூறினார்.
அபூபக்கர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இதற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "விளக்கமளியுங்கள்" என்று கூறினார்கள்.
அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அந்த நிழல் இஸ்லாமாகும். அதிலிருந்து சொட்டும் நெய்யும் தேனும் குர்ஆனாகும். அதன் இனிமை (இவ்வாறு) சொட்டுகிறது. குர்ஆனை அதிகமாக ஓதுபவர்களும் உண்டு; குறைவாக ஓதுபவர்களும் உண்டு. வானத்திலிருந்து பூமிக்கு நீண்டிருக்கும் அந்தக் கயிறு, நீங்கள் இருக்கும் சத்தியமாகும். நீங்கள் அதைப் பற்றியுள்ளீர்கள்; அல்லாஹ் உங்களை அதன் மூலம் உயர்த்துகிறான். பிறகு உங்களுக்குப் பின் வேறொருவர் அதைப் பற்றுவார்; அதன் மூலம் அவர் உயர்வார். பிறகு வேறொருவர் அதைப் பற்றுவார்; அதன் மூலம் அவரும் உயர்வார். பிறகு வேறொருவர் அதைப் பற்றுவார்; அவரிடம் அது அறுந்துவிடும்; பின்னர் அவருக்காக அது இணைக்கப்படும்; அதன் மூலம் அவரும் உயர்வார். அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் கூறியது சரியா? தவறா? என்று எனக்கு அறிவியுங்கள்."
நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், "சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்; சிலவற்றைத் தவறாகச் சொன்னீர்."
அபூபக்கர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் எதில் தவறு செய்தேன் என்பதைத் தாங்கள் எனக்குக் கூற வேண்டும்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "சத்தியம் செய்யாதீர்" என்று கூறினார்கள்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றிரவு கனவில் ஒரு விதானத்தைக் கண்டேன். அதிலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக் கொண்டிருந்தன. மக்கள் தங்கள் கைகளால் அதை ஏந்துவதைக் கண்டேன். (அவர்களில்) அதிகம் எடுத்துக்கொள்பவரும் குறைத்துக்கொள்பவரும் இருந்தனர். மேலும் வானத்திலிருந்து பூமி வரை தொங்கும் ஒரு கயிற்றையும் கண்டேன். தாங்கள் அதைப் பிடித்துக் கொண்டு மேலேறியதைக் கண்டேன். பிறகு தங்களுக்குப் பின் ஒரு மனிதர் அதைப் பிடித்து மேலேறினார். பிறகு மற்றொருவர் அதைப் பிடித்து மேலேறினார். பிறகு மற்றொருவர் அதைப் பிடித்தார்; அது அறுந்துவிட்டது. பிறகு அவருக்காக அது (மீண்டும்) இணைக்கப்பட்டது; அவரும் மேலேறினார்” என்று கூறினார்.
அபூபக்கர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! (இதற்கு) விளக்கம் அளிக்க என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விளக்கம் அளிப்பீராக” என்றார்கள்.
அபூபக்கர் (ரலி) கூறினார்: “அந்த விதானம் இஸ்லாமாகும். அதிலிருந்து சொட்டும் நெய்யும் தேனும் குர்ஆனாகும்; அதன் இனிமையும் மென்மையுமாகும். மக்கள் அதைத் தங்கள் கைகளால் ஏந்துவது, குர்ஆனை (கற்பதில்) அதிகப்படுத்திக்கொள்பவரும் குறைத்துக்கொள்பவருமாவர். வானத்திலிருந்து பூமி வரை தொங்கும் கயிறு, தாங்கள் நிலைத்திருக்கும் சத்தியமாகும். தாங்கள் அதைப் பற்றிக்கொள்வீர்கள்; அல்லாஹ் அதன் மூலம் தங்களை உயர்த்துவான். பிறகு தங்களுக்குப் பின் ஒரு மனிதர் அதைப் பற்றுவார்; அதன் மூலம் அவரும் உயர்வா். பிறகு மற்றொருவர் அதைப் பற்றுவார்; அதன் மூலம் அவரும் உயர்வா். பிறகு மற்றொருவர் அதைப் பற்றுவார்; அது அறுந்துவிடும். பிறகு அவருக்காக அது இணைக்கப்படும்; அவரும் அதன் மூலம் உயர்வா். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் (சொன்னது) சரியா? அல்லது தவறா? எனக்கு அறிவியுங்கள்.”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்; சிலவற்றில் தவறிழைத்துவிட்டீர்” என்றார்கள்.
அபூபக்கர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் எதில் தவறிழைத்தேன் என்று தாங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சத்தியம் செய்யாதீர்!” என்றார்கள்.