"நாங்கள் முன்னூறு பேராகப் புறப்பட்டோம். எங்கள் பயண உணவை எங்கள் தோள்களில் சுமந்து சென்றோம். (வழியில்) எங்கள் உணவு தீர்ந்துவிட்டது. எந்தளவிற்கென்றால், எங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம்பழத்தை உண்ணும் நிலை ஏற்பட்டது."
ஒருவர், "அபூ அப்துல்லாஹ்வே! ஒரு மனிதருக்கு அந்த ஒரு பேரீச்சம்பழம் எதற்குப் போதும்?" என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "நாங்கள் அதை இழந்தபோதுதான் அதன் இழப்பை (அருமையை) உணர்ந்தோம். நாங்கள் கடற்கரையை அடைந்தோம். அங்கே கடல் ஒரு (பெரிய) மீனை வெளியே எறிந்திருந்தது. பதினெட்டு நாட்கள் அதிலிருந்து நாங்கள் விரும்பியவாறு உண்டோம்" என்று கூறினார்கள்.