அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தூதராகவும் ஏற்றுத் திருப்தி கொண்டவர் ஈமானின் சுவையைச் சுவைத்தவராவார்."