حَدَّثَنَا أَبُو عُمَرَ، حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ أَرْبَعٌ أَفْضَلُ الْكَلاَمِ لاَ يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ .
சமுரா பின் ஜுன்தப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வார்த்தைகளிலேயே மிகச் சிறந்தவை நான்கு இருக்கின்றன. அவற்றில் எதை நீங்கள் முதலில் கூறினாலும் பரவாயில்லை. சுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ், வ லாயிலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன், அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை, அல்லாஹ் மிகப் பெரியவன்)."