அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு மூஃமினின் உவமை பயிரைப் போன்றதாகும். காற்று அதனைத் தொடர்ந்து சாய்த்துக் கொண்டேயிருக்கும். அவ்வாறே ஒரு மூஃமினுக்குத் தொடர்ந்து சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். ஒரு முனாஃபிக்கின் உவமை தேவதாரு மரத்தைப் போன்றதாகும். அது (சிறு அசைவுகளுக்கும்) அசைந்து கொடுப்பதில்லை, வேரோடு சாய்க்கப்படும் வரை (அல்லது வெட்டப்படும் வரை).