حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا، فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي تَقَعُ فِي النَّارِ يَقَعْنَ فِيهَا، فَجَعَلَ يَنْزِعُهُنَّ وَيَغْلِبْنَهُ فَيَقْتَحِمْنَ فِيهَا، فَأَنَا آخُذُ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ، وَأَنْتُمْ تَقْتَحِمُونَ فِيهَا .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "எனக்கும் மக்களுக்கும் உள்ள உதாரணமானது, ஒரு மனிதரின் உதாரணத்தைப் போன்றது. அவர் ஒரு நெருப்பை மூட்டினார். அது அவரைச் சுற்றியுள்ளவற்றை ஒளிரச் செய்தபோது, விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் பூச்சி இனங்களும் அதில் வந்து விழத் தொடங்கின. அவர் அவற்றை (விழவிடாமல்) தடுக்கலானார்; ஆனால் அவை அவரை மீறிக்கொண்டு அந்த நெருப்பில் விழலாயின. (இதைப் போன்றே) நான் உங்களை நரக நெருப்பிலிருந்து தடுப்பதற்காக உங்கள் இடுப்புக்கச்சைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீங்களோ (என்னை மீறிக்கொண்டு) அதில் முண்டியடித்துக் கொண்டு விழுகிறீர்கள்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"என்னுடைய உவமையும் என்னுடைய சமுதாயத்தின் உவமையும், நெருப்பை மூட்டிய ஒரு மனிதரின் உவமையைப் போன்றதாகும். அப்போது (அந்த) நெருப்பில் (சிறு) பிராணிகளும் விட்டில்பூச்சிகளும் விழத் தொடங்கின. நான் உங்களின் இடுப்புப் பிடியைப் பற்றி (அதில் விழாமல்) தடுக்கிறேன்; ஆனால் நீங்களோ அதில் பாய்ந்து விழுகிறீர்கள்."
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எனது உதாரணமும் உங்களது உதாரணமும், நெருப்பை மூட்டிய ஒரு மனிதரின் உதாரணத்தைப் போன்றது. வெட்டுக்கிளிகளும் விட்டில்பூச்சிகளும் அதில் விழத் தொடங்கின; அவரோ அவற்றை (நெருப்பிலிருந்து) விரட்டுகிறார். நான் உங்களை (நரக) நெருப்பிலிருந்து (காப்பாற்ற) உங்கள் இடுப்புப் பகுதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ என் கையிலிருந்து நழுவிச் செல்கிறீர்கள்.”