حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ قَيْسٍ الْكِنْدِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، أَنَّ أَعْرَابِيًّا، قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنَّ شَرَائِعَ الإِسْلاَمِ قَدْ كَثُرَتْ عَلَىَّ فَأَنْبِئْنِي مِنْهَا بِشَىْءٍ أَتَشَبَّثُ بِهِ . قَالَ لاَ يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ .
அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; ஒரு நாடோடி அரபு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்:
"இஸ்லாத்தின் சட்டங்கள் (கற்றுக்கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும்) எனக்கு அதிகமாகிவிட்டன. எனவே, நான் உறுதியாகப் பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு விஷயத்தை எனக்கு அறிவியுங்கள்."
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "வல்லமையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டு உங்கள் நாவு எப்போதும் நனைந்திருக்கட்டும்."