(பொருள்):
"யா அல்லாஹ்! நான் என்னை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன்; என் முகத்தை உன்னளவில் திருப்பிவிட்டேன்; என் முதுகை உன்னளவில் சாய்த்து (உன்னையே சார்ந்திருந்து) விட்டேன்; என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். உன்னிடமுள்ள (வெகுமதியின்) மீதான ஆசையாலும், (தண்டனையின்) மீதான அச்சத்தாலுமே (இவ்வாறு செய்தேன்). உன்னைத் தவிர உன்னிடமிருந்து தப்பியோடவோ புகலிடம் தேடவோ வேறு இடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தின் மீதும், நீ அனுப்பிய உன்னுடைய தூதர் மீதும் நான் நம்பிக்கை கொள்கிறேன்."
(இவ்வாறு கூறி) நீர் மரணித்தால் ஃபித்ராவில் (இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில்) மரணிப்பீர்.
மேலும் இப்னு பஷ்ஷார் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'இரவில்' என்பது குறிப்பிடப்படவில்லை.