சுஹைல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
எங்களில் ஒருவர் உறங்க விரும்பினால், அவர் தனது வலது புறமாகப் படுத்துக் கொள்ள வேண்டும்; பின்னர் பின்வருமாறு கூற வேண்டும் என்று அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள்:
(பொருள்: "அல்லாஹ்வே! வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளின் இறைவனே! தானியங்களையும் பேரீச்சங்கொட்டைகளையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல் மற்றும் ஃபுர்கானை (திருக்குர்ஆனை) அருளியவனே! யாருடைய நெற்றி உரோமங்கள் உன் பிடியில் இருக்கின்றனவோ அந்த ஒவ்வொரு பொருளின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! நீயே முதலாமவன்; உனக்கு முன் எதுவும் இல்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின் எதுவும் இல்லை. நீயே பகிரங்கமானவன் (மேலானவன்); உனக்கு மேலே எதுவும் இல்லை. நீயே அந்தரங்கமானவன்; உனக்கு அப்பால் எதுவும் இல்லை. எங்களைவிட்டுக் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையிலிருந்து எங்களை விடுவிப்பாயாக!")
இதை அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும், (அபூஹுரைரா) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்தார்கள்.