அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் நூறு கருணைகளைப் படைத்தான். அவற்றில் ஒன்றை தன் படைப்பினங்களுக்கிடையே வைத்தான் (அதன் மூலம் படைப்பினங்கள் தமக்கிடையே அன்பு, இரக்கம், கருணை காட்டுகின்றன). நூறில் ஒன்று நீங்கலாக (மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது கருணைகளை மறுமைக்காக) தன்னிடம் (சேமித்து) வைத்துள்ளான்."