அலி பின் அபீ தாலிப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அபூபக்கரும் உமரும் அங்கு வந்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இவ்விருவரும் நபிமார்கள் மற்றும் தூதர்களைத் தவிர்த்து, முன்னோர்களிலும் பின்னோர்களிலும் உள்ள சொர்க்கவாசிகளான முதிர்ந்தவர்களின் தலைவர்கள் (அதாவது, இளமைப் பருவத்தைக் கடந்து முதிர்ச்சி அடைந்தவர்கள்) ஆவார்கள். அலியே! இதை அவர்களுக்குத் தெரிவிக்காதீர்கள்' என்று கூறினார்கள்."