இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2398 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ إِبْرَاهِيمَ،
بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ، سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏ قَدْ كَانَ يَكُونُ فِي الأُمَمِ قَبْلَكُمْ مُحَدَّثُونَ فَإِنْ يَكُنْ فِي أُمَّتِي مِنْهُمْ
أَحَدٌ فَإِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ مِنْهُمْ ‏ ‏ ‏.‏ قَالَ ابْنُ وَهْبٍ تَفْسِيرُ مُحَدَّثُونَ مُلْهَمُونَ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களில் (அல்லாஹ்வால்) உள்ளுணர்வூட்டப்பட்டவர்கள் (முஹத்தஸூன்) இருந்திருக்கிறார்கள். என்னுடைய சமூகத்தில் (உம்மத்தில்) அவர்களில் யாராவது இருந்தால், நிச்சயமாக உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களே அவர்களில் ஒருவராவார்.”
இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்கள் ‘முஹத்தஸூன்’ என்பதற்கு ‘முல்ஹமூன்’ (உள்ளுணர்வூட்டப்பட்டவர்கள்) என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح