இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2495ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ
أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ عَبْدًا، لِحَاطِبٍ جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَشْكُو حَاطِبًا
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ كَذَبْتَ
لاَ يَدْخُلُهَا فَإِنَّهُ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ ‏ ‏ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஹாத்திப் (ரழி) அவர்களின் ஓர் அடிமை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ஹாத்திப் (ரழி) அவர்களுக்கு எதிராக முறையிட்டு (அவர் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தி), "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஹாத்திப் நரகத்தில் நுழைவார்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் பொய் சொல்கிறீர்; அவர் அதில் நுழையமாட்டார். ஏனெனில், அவர் பத்ரிலும் ஹுதைபிய்யாவிலும் பங்கெடுத்திருக்கிறார்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح