அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் கொண்ட ஒருவர் அன்சாரிகளிடம் ஒருபோதும் பகைமை கொள்ளமாட்டார்.
அபூ ஸயீத் குத்ரீ (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுவதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர் அன்ஸார்கள் (ரழி) மீது ஒருபோதும் பகைமை பாராட்டமாட்டார்.