கஅப் பின் உஜ்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்-ஹுதைபிய்யா காலத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் ஒரு சமையல் பாத்திரத்தின் கீழே நெருப்பை மூட்டிக் கொண்டிருந்தேன்; என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அவர்கள், 'உன் பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்றேன். அவர்கள், 'உன் தலையை மழித்துக்கொள். மேலும், மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்; அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி; அல்லது ஓர் ஆட்டை அறுத்துப்பலியிடு' என்று கூறினார்கள்."
(அறிவிப்பாளர்) அய்யூப் கூறினார்: "இவற்றில் எதை அவர்கள் முதலில் கூறினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா காலத்தில் என்னிடம் வந்தார்கள். நான் எனது பாத்திரத்தின் கீழ் நெருப்பை மூட்டிக் கொண்டிருந்தேன். பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது அவர்கள், “உன் தலையிலுள்ள பூச்சிகள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்றேன். அவர்கள் கூறினார்கள்: “உன் தலையை மழித்துக்கொள். (பரிகாரமாக) மூன்று நாட்கள் நோன்பு நோற்பாயாக; அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பாயாக; அல்லது (ஒரு பிராணியை) அறுத்துப் பலியிடுவாயாக.” அய்யூப் அவர்கள் கூறினார்கள்: "இவற்றில் எதைக்கொண்டு அவர்கள் (பேச்சைத்) தொடங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது."