இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

158ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، جَمِيعًا عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ ثَلاَثٌ إِذَا خَرَجْنَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَالدَّجَّالُ وَدَابَّةُ الأَرْضِ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று (அடையாளங்கள்) வெளிப்பட்டுவிட்டால், அதற்கு முன் ஈமான் கொள்ளாதவருக்கோ அல்லது தனது ஈமானின் மூலம் நன்மையைச் சம்பாதிக்காதவருக்கோ (அதாவது, ஈமான் இருந்தும் நற்செயல்கள் செய்யாதிருந்தவருக்கோ) அவரின் ஈமான் பயனளிக்காது: (அவை) சூரியன் அது மறையும் இடத்திலிருந்து உதிப்பது, தஜ்ஜால் மற்றும் பூமியிலிருந்து வெளிப்படும் பிராணி."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح