நான் நஜ்ரானுக்கு வந்தபோது, அவர்கள் (நஜ்ரான் கிறிஸ்தவர்கள்) என்னிடம் கேட்டார்கள்: நீங்கள் குர்ஆனில் «ஹாரூனின் சகோதரியே» (அதாவது ஹஜ்ரத் மர்யம் (அலை) அவர்கள்) என்று ஓதுகிறீர்கள், ஆனால் மூஸா (அலை) அவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு மிகவும் முன்னதாகப் பிறந்தார்களே. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தபோது, நான் அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன், அதற்கு அவர்கள் கூறினார்கள்: (பழங்காலத்து) மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மற்றும் நல்லவர்களின் பெயர்களை (தங்கள் மக்களுக்குச்) சூட்டுவது வழக்கம்.