இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4818ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ طَاوُسًا، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ‏.‏ أَنَّهُ سُئِلَ عَنْ قَوْلِهِ ‏{‏إِلاَّ الْمَوَدَّةَ فِي الْقُرْبَى‏}‏ فَقَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ قُرْبَى آلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَقَالَ ابْنُ عَبَّاسٍ عَجِلْتَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ بَطْنٌ مِنْ قُرَيْشٍ إِلاَّ كَانَ لَهُ فِيهِمْ قَرَابَةٌ فَقَالَ إِلاَّ أَنْ تَصِلُوا مَا بَيْنِي وَبَيْنَكُمْ مِنَ الْقَرَابَةِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

**{இல்லல் மவத்தத்த ஃபில் குர்பா}** (“உறவின் முறையை முன்னிட்டு அன்பு காட்டுவதைத் தவிர”) எனும் இறைவசனம் (42:23) குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது.

அப்போது ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்), “இது முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் (ஆல்) காட்டவேண்டிய அன்பாகும்” என்று கூறினார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “நீர் அவசரப்பட்டுவிட்டீர்! குரைஷிக் குலத்தின் எந்தக் கிளையினராக இருந்தாலும் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே உறவுமுறை இருக்கவே செய்தது. (ஆகவே), ‘எனக்கும் உங்களுக்குமிடையே உள்ள உறவுமுறையை நீங்கள் பேணி நடந்துகொள்வதைத் தவிர (வேறெதையும் நான் உங்களிடம் கேட்கவில்லை)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح