இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4927ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ ـ وَكَانَ ثِقَةً ـ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا نَزَلَ عَلَيْهِ الْوَحْىُ حَرَّكَ بِهِ لِسَانَهُ ـ وَوَصَفَ سُفْيَانُ ـ يُرِيدُ أَنْ يَحْفَظَهُ فَأَنْزَلَ اللَّهُ ‏{‏لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ‏}‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்படும்போது தங்களின் நாவை அசைப்பார்கள். (ஓர் உப அறிவிப்பாளரான ஸுஃப்யான் அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தங்களின் நாவை அசைப்பார்கள் என்பதை) செய்து காட்டி, "அதை (வஹீயை) மனனம் செய்வதற்காக (அவ்வாறு செய்தார்கள்)" என்றும் கூறினார்கள்.) எனவே அல்லாஹ், “{லா துஹர்ரிக் பிஹி லிஸானக லிதஃஜல பிஹி} - (வஹீயை) அவசரமாக (மனனம் செய்வதற்காக) உமது நாவை அசைக்காதீர்” என்ற வசனத்தை அருளினான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح