நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கிப்) புறப்பட்டபோது, உஸாமா (ரழி) அவர்களைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்தியிருந்தார்கள். 'ஜம்உ' (முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவை நோக்கிப்) புறப்பட்டபோது, ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரழி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்தியிருந்தார்கள். மேலும், (மினாவில் உள்ள) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.