இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

18129முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يَزِيدُ أَخْبَرَنَا هِشَامٌ عَنْ مُحَمَّدٍ عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ رَسُولِ اللهِ ﷺ فَذَكَرَ فِتْنَةً فَقَرَّبَهَا فَمَرَّ رَجُلٌ مُتَقَنِّعٌ فَقَالَ هَذَا يَوْمَئِذٍ عَلَى الْهُدَى قَالَ فَاتَّبَعْتُهُ حَتَّى أَخَذْتُ بِضَبْعَيْهِ فَحَوَّلْتُ وَجْهَهُ إِلَيْهِ وَكَشَفْتُ عَنْ رَأْسِهِ فَقُلْتُ هَذَا يَا رَسُولَ اللهِ؟ قَالَ نَعَمْ فَإِذَا هُوَ عُثْمَانُ بْنُ عَفَّانَ
கஅப் பின் உஜ்ரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அப்போது அவர்கள் (எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும்) ஒரு குழப்பத்தைப் (ஃபித்னாவைப்) பற்றிப் பேசி, அது (மிகவும்) நெருங்கிவிட்டது என்று கூறினார்கள். அப்போது, (தனது ஆடையால்) தலையை மூடியவாறு ஒரு மனிதர் அவ்வழியாகக் கடந்து சென்றார். (அப்போது) நபியவர்கள், "அந்நாளில் (அந்தக் குழப்பத்தின் போது) இவர் நேர்வழியில் இருப்பார்" என்று கூறினார்கள்.

உடனே, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவருடைய இரு புஜங்களையும் பிடித்து, நபியவர்களின் பக்கம் அவரது முகத்தைத் திருப்பினேன். (பிறகு) அவர் தலையிலிருந்த ஆடையை விலக்கிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! இவரா (அந்த நேர்வழியில் இருப்பவர்)?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "ஆம்!" என்றார்கள். (அப்போது நான் கவனித்தபோது) அவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) ஆவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் லி கைரிஹி (பிற சான்றுகளின் துணையுடன் ஆதாரப்பூர்வமானது)
صحيح لغيره