இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

18748முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يَزِيدُ قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ وَكَانَ أَشْبَهَ النَّاسِ بِهِ الْحَسَنُ بْنُ عَلِيٍّ
அபூஜுஹைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். (அப்போது) மக்களில் தோற்றத்தில் அவர்களுக்கு (நபி அவர்களுக்கு) மிகவும் ஒப்பானவராக ஹஸன் பின் அலீ (ரழி) அவர்கள் இருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح