இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

375 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ عُلَيَّةَ - عَنْ عَبْدِ الْعَزِيزِ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ ‏ ‏ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ ‏ ‏ ‏.‏
இந்த ஹதீஸை அப்துல் அஸீஸ் அவர்களும் இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கிறார்கள். அதன் வாசகங்களாவன:

தீய மற்றும் அருவருப்பானவைகளிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
381சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ إِنَاءٍ وَاحِدٍ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே பாத்திரத்திலிருந்து உளூ செய்து வந்தார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)