உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தமது கையை மூன்று முறை கழுவும் வரை பாத்திரத்தினுள் நுழைக்க வேண்டாம், ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்று அவருக்குத் தெரியாது.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தமது கையை மூன்று முறை கழுவும் வரை, தமது உளூவுக்கான தண்ணீரில் அதை முக்க வேண்டாம்; ஏனெனில் உங்களில் எவருக்கும் தமது கை இரவில் எங்கே இருந்தது என்று தெரியாது."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரேனும் உறக்கத்திலிருந்து எழுந்தால், தனது கையை மூன்று முறை கழுவும் வரை பாத்திரத்தினுள் வைக்க வேண்டாம். ஏனெனில், அவரது கை இரவில் எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்."