ஒட்டகங்கள் முழங்கால்களைப் பதிக்கும் இடங்களில் தொழுவது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்; ஒட்டகங்கள் முழங்கால்களைப் பதிக்கும் இடங்களில் தொழ வேண்டாம். ஏனெனில் அவை ஷைத்தான்களின் இடங்களாகும். மேலும் ஆட்டுத் தொழுவத்தில் தொழுவது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: அங்கு தொழுங்கள். ஏனெனில் அவை பரக்கத் (அருள்வளம்) நிறைந்த இடங்களாகும்.