அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பள்ளிவாசலில் ஒருவர் காணாமற்போன தமது பொருள் குறித்து அறிவிப்புச் செய்வதை எவரேனும் கேட்டால், அவர், 'அல்லாஹ் அதனை உமக்குத் திருப்பிக் கொடுக்காதிருப்பானாக! ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை' என்று கூறட்டும்."