இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

504சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، قَالَ سَمِعْتُ جَدِّي عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي مَحْذُورَةَ، يَذْكُرُ أَنَّهُ سَمِعَ أَبَا مَحْذُورَةَ، يَقُولُ أَلْقَى عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الأَذَانَ حَرْفًا حَرْفًا ‏ ‏ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ حَىَّ عَلَى الْفَلاَحِ ‏ ‏ ‏.‏ قَالَ وَكَانَ يَقُولُ فِي الْفَجْرِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ ‏.‏
அபூ மஹ்தூரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு பாங்கை (அதானை) சொல்லுக்குச் சொல் கற்றுக் கொடுத்தார்கள்; அல்லாஹ் மிகப்பெரியவன், அல்லாஹ் மிகப்பெரியவன், அல்லாஹ் மிகப்பெரியவன், அல்லாஹ் மிகப்பெரியவன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்; முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்; தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்; வெற்றியின் பக்கம் வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள். அவர்கள் ஃபஜ்ரு தொழுகையில் “தூக்கத்தை விட தொழுகை மேலானது” என்று கூறுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)