உபை இப்னு கஅப் (ரழி) கூறினார்கள்:
"ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை நடத்தினார்கள், பிறகு அவர்கள் கூறினார்கள்: 'இன்னார் தொழுகைக்கு வந்தாரா?' அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். அவர்கள், '(இன்னார்) வந்தாரா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். அவர்கள் கூறினார்கள்: 'இந்த இரண்டு தொழுகைகளும் (இஷா மற்றும் ஃபஜ்ர்) நயவஞ்சகர்களுக்கு மிகவும் பாரமானவையாகும். அவற்றிலுள்ள (நன்மையை) அவர்கள் அறிந்திருந்தால், தவழ்ந்தாவது வந்துவிடுவார்கள். முதல் வரிசையானது வானவர்களின் வரிசையைப் போன்றதாகும். அதன் சிறப்பை நீங்கள் அறிந்திருந்தால், அதற்காக நீங்கள் முந்திக்கொள்வீர்கள். ஒரு மனிதர் மற்றொரு மனிதருடன் தொழுவது, அவர் தனியாகத் தொழுவதை விட அதிக நன்மை உடையதாகும். மேலும், ஒரு மனிதர் மற்ற இருவருடன் தொழுவது, அவர் மற்றொருவருடன் தொழுவதை விட அதிக நன்மை உடையதாகும்; எவ்வளவு அதிகமானோர் இருக்கிறார்களோ, அது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்.'"