அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் உளூவை அழகாகச் செய்து, பின்னர் மஸ்ஜித்திற்குப் புறப்பட்டுச் சென்று, மக்கள் ஏற்கனவே தொழுதுவிட்டதைக் கண்டால், அவர்களுடைய நன்மையிலிருந்து சிறிதளவும் குறைக்காமல், (தொழுகையில்) கலந்துகொண்டவர்களின் நன்மையைப் போன்றே அல்லாஹ் அவருக்கும் நன்மையை விதிப்பான்."