இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

441ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ لَقَدْ رَأَيْتُ الرِّجَالَ عَاقِدِي أُزُرِهِمْ فِي أَعْنَاقِهِمْ مِثْلَ الصِّبْيَانِ مِنْ ضِيقِ الأُزُرِ خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ قَائِلٌ يَا مَعْشَرَ النِّسَاءِ لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَرْفَعَ الرِّجَالُ ‏.‏
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஆடை பற்றாக்குறையால், சிறுவர்களைப் போல ஆண்கள் தங்கள் கீழாடைகளின் (முனைகளை) கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதுகொண்டிருந்ததை நான் கண்டேன்.

அறிவித்தவர்களில் ஒருவர் கூறினார்கள்: பெண்களே, ஆண்கள் (தங்கள் தலைகளை) உயர்த்தும் வரை உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح