حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي صَلاَتَهُ مِنَ اللَّيْلِ كُلَّهَا وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ .
ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரவில் தமது தொழுகை முழுவதையும், நான் அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் குறுக்காகப் படுத்திருக்கும் நிலையில் தொழுவார்கள். அவர்கள் வித்ர் தொழ நாடினால் என்னை எழுப்புவார்கள்; நானும் வித்ர் தொழுவேன்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் (நபியவர்களின்) படுக்கையில், அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் குறுக்காகப் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழுவார்கள். அவர்கள் வித்ரு தொழ விரும்பும்போது, என்னை எழுப்புவார்கள்; நானும் வித்ரு தொழுவேன்.