இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

970சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ أَنْبَأَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ فِي كُلِّ صَلاَةٍ قِرَاءَةٌ فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَاهَا أَخْفَيْنَا مِنْكُمْ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"ஒவ்வொரு தொழுகையிலும் ஓதுதல் உண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சப்தமாக ஓதி) எங்களுக்கு எதைக் கேட்கச் செய்தார்களோ, அதை நாங்கள் உங்களுக்குக் கேட்கச் செய்கிறோம்; அவர்கள் (மெளனமாக ஓதி) எங்களிடமிருந்து எதை மறைத்தார்களோ, அதை நாங்கள் உங்களிடமிருந்து மறைக்கிறோம்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)