மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது, ஓர் ஆட்டுக்குட்டி அவர்களின் கைகளுக்கு இடையே கடந்து செல்ல விரும்பினால், அது கடந்து செல்ல முடியும்.
மைமூனா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது, ஒரு ஆட்டுக்குட்டி அவர்களின் கைகளுக்குக் கீழே செல்ல விரும்பினால், அது செல்லக்கூடிய அளவுக்குத் தமது கைகளை விலாப்புறங்களிலிருந்து அகற்றி வைப்பார்கள்.