'உக்பா பின் 'ஆமிர் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் உளூச் செய்து, அதை அழகிய முறையில் செய்கிறாரோ, பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவற்றில் தம் உள்ளத்தாலும் முகத்தாலும் (முழுமையாக) முன்னோக்கிய நிலையில் இருக்கிறாரோ, அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது.'