"இப்னுல் முஸய்யப் அவர்கள் அமர்ந்திருந்த ஒரு சபையில், அபுல் அஹ்வஸ் (ரழி) அவர்கள், தாம் அபூ தர் (ரழி) அவர்கள் கூறுவதைக் கேட்டதாக எங்களுக்கு அறிவிப்பதை நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் (சுப்ஹானஹு வ தஆலா) தன் அடியானைத் தொழுகையில் இருக்கும்போது, அவன் (வேறு பக்கம்) திரும்பாத வரை, அவனைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறான். அவன் தன் முகத்தைத் திருப்பினால், அவன் (அல்லாஹ்) அவனை விட்டும் திரும்பிவிடுகிறான்."