இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1117ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ حَدَّثَنِي الْحُسَيْنُ الْمُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فَقَالَ ‏ ‏ صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ ‏ ‏‏.‏
இம்ரான் இப்னு ஹுசைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

எனக்கு மூலநோய் இருந்தது, அதனால் நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், "நின்று தொழுங்கள். உங்களுக்கு அது முடியாவிட்டால், அமர்ந்து தொழுங்கள். அதுவும் உங்களுக்கு முடியாவிட்டால், ஒருக்களித்துப் படுத்துத் தொழுங்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1223சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ كَانَ بِي النَّاصُورُ فَسَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الصَّلاَةِ فَقَالَ ‏ ‏ صَلِّ قَائِمًا. فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا. فَإِنْ لَمْ تَسْتَطِعْ، فَعَلَى جَنْبٍ ‏ ‏ ‏.‏
இம்ரான் பின் ஹுசைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நான் நாசூர்* நோயால் அவதிப்பட்டேன். நான் தொழுகையைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: ‘நின்று தொழுங்கள்; உங்களுக்கு அது முடியாவிட்டால், அமர்ந்து தொழுங்கள்; அதுவும் முடியாவிட்டால், ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தொழுங்கள்.’”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)