حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، {عَنْ عَمْرٍو،} قَالَ أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களின் தொழுகை முடிவடைவதை தக்பீரைக் கேட்பதன் மூலம் அறிந்துகொள்வது வழக்கம்.
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي بِذَا أَبُو مَعْبَدٍ، - ثُمَّ أَنْكَرَهُ بَعْدُ - عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا نَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, நாங்கள் தக்பீரை (அல்லாஹு அக்பர்) கேட்கும் போது அறிந்து கொள்வது வழக்கம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தொழுகை முடிவடைவதை தக்பீர் மூலம் நாங்கள் அறிந்துகொள்வோம். அம்ர் (பின் தீனார்) கூறினார்கள்: நான் இதைப்பற்றி அபூ மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் குறிப்பிட்டேன். ஆனால் அவர்கள் அதை மறுத்து, "நான் ஒருபோதும் அதை உமக்கு அறிவிக்கவில்லை" என்று கூறினார்கள். அம்ர் கூறினார்கள்: அவர்கள் இதற்கு முன்பாக இதை அறிவித்திருந்தார்கள்.