“ஒரு மனிதர், ஸைத் பின் அர்கம் (ரழி) அவர்களிடம், ‘ஒரே நாளில் இரண்டு பெருநாள்கள் வந்தபோது நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்களா?’ என்று கேட்பதை நான் செவியுற்றேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். அவர், ‘அவர்கள் என்ன செய்தார்கள்?’ என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள்: ‘அவர்கள் (ஸல்) பெருநாள் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர், ஜும்ஆத் தொழுகையைத் தொழாமல் இருப்பதற்குச் சலுகை அளித்தார்கள். பிறகு, “யார் (ஜும்ஆத்) தொழ விரும்புகிறாரோ, அவர் தொழுதுகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.’”