உமாரா இப்னு ருவைபா (ரழி) அவர்கள், தாம் பிஷ்ர் இப்னு மர்வான் மிம்பரின் மீது தம் கைகளை உயர்த்துவதைக் கண்டதாகவும், (அப்போது) தாம் (பின்வருமாறு) கூறியதாகவும் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வே, இந்தக் கைகளை அலங்கோலமாக்குவாயாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளால் இதைவிட அதிகமாக சைகை செய்ததை நான் கண்டதில்லை; மேலும் அன்னார் தம் ஆட்காட்டி விரலால் (மட்டுமே) சுட்டிக்காட்டினார்கள்.