உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
'இரு பெருநாட்களிலும் நாங்களும், (பொதுவாக வீடுகளிலேயே தங்கும்) திரைக்குள் இருக்கும் பெண்களும், கன்னிப்பெண்களும் (பெருநாள் தொழுகைக்காக) வெளியே செல்லுமாறு (நபி (ஸல்) அவர்களால்) கட்டளையிடப்பட்டோம். (அப்போது) மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் வெளியேறி, மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும்; (தொழுகையில் பங்கேற்காமல்) மக்களுடன் சேர்ந்து அவர்களும் தக்பீர் கூற வேண்டும் என்று (உம்மு அதிய்யா ரழி) அவர்கள் கூறினார்கள்.'