حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَنَتَ بَعْدَ الرَّكْعَةِ فِي صَلاَةٍ شَهْرًا إِذَا قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . يَقُولُ فِي قُنُوتِهِ " اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ نَجِّ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ نَجِّ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ نَجِّ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ " . قَالَ أَبُو هُرَيْرَةَ ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ الدُّعَاءَ بَعْدُ فَقُلْتُ أُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ تَرَكَ الدُّعَاءَ لَهُمْ - قَالَ - فَقِيلَ وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு (எழுந்து நின்று), "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா" என்று கூறியதும் குனூத் ஓதினார்கள். அவர்கள் தமது குனூத்தில்:
(யா அல்லாஹ்! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக; யா அல்லாஹ்! ஸலமா பின் ஹிஷாமைக்காப்பாற்றுவாயாக; யா அல்லாஹ்! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக; யா அல்லாஹ்! இறைநம்பிக்கையாளர்களில் பலவீனமானவர்களைக் காப்பாற்றுவாயாக; யா அல்லாஹ்! முளர் கூட்டத்தார் மீது உனது பிடியை இறுக்குவாயாக; யா அல்லாஹ்! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போன்றதொரு பஞ்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவாயாக!) என்று கூறினார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பிரார்த்தனையை விட்டுவிட்டதை நான் கண்டேன். ஆகவே நான், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகவே நான் கருதுகிறேன்' என்று கூறினேன். அதற்கு (என்னிடம்), 'அவர்கள் (மதீனாவுக்கு) வந்துவிட்டதை நீர் பார்க்கவில்லையா?' என்று கேட்கப்பட்டது.