அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குச் சில வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தார்கள்; அவற்றை நான் துன்பத்தின்போது (அல்லது கவலை ஏற்படும்போது) கூறுவேன்: 'அல்லாஹ்! அல்லாஹு ரப்பீ, லா உஷ்ரிக்கு பிஹி ஷைஅன்' (அல்லாஹ், அல்லாஹ்வே என் இறைவன். அவனுக்கு நான் எதையும் இணையாக்க மாட்டேன்).'