ஷகல் பின் ஹுமைத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் பாதுகாப்புத் தேடும் ஒரு வழியை எனக்குக் கற்றுத் தாருங்கள்; அதைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடிக்கொள்வேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு, 'நீர் கூறுவீராக: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் என் செவியின் தீங்கிலிருந்தும், என் பார்வையின் தீங்கிலிருந்தும், என் நாவின் தீங்கிலிருந்தும், என் இதயத்தின் தீங்கிலிருந்தும், என் விந்தின் (மர்ம உறுப்பின்) தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்.