இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

986 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِزَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள் தொழுகைக்குச் (ஈத் பெருநாள் தொழுகைக்கு) செல்வதற்கு முன்னர் ஸகாத்துல் ஃபித்ர் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
986 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ، اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِإِخْرَاجِ زَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் தொழுகைக்காக (ஈத் தொழுகைக்காக)ப் புறப்படுவதற்கு முன் ஸகாத்துல் ஃபித்ரைச் (ஃபித்ரா) செலுத்துமாறு கட்டளையிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2521சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى، قَالَ حَدَّثَنَا الْحَسَنُ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُوسَى، ح قَالَ وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ حَدَّثَنَا الْفُضَيْلُ، قَالَ حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِصَدَقَةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ ‏.‏ قَالَ ابْنُ بَزِيعٍ بِزَكَاةِ الْفِطْرِ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது:
மக்கள் தொழுகைக்கு (ஈத் தொழுகைக்கு) புறப்படுவதற்கு முன் ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுக்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு பஸீஃ கூறினார்: "ஸகாத்துல் ஃபித்ர்.")
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)