அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தம்மைத் தேவையற்றவராக்கும் அளவுக்கு (செல்வம்) தம்மிடம் இருக்கும்போது யார் யாசிக்கிறாரோ, அவரது முகத்தில் மறுமை நாளில் கீறல்கள் இருக்கும்.' 'அல்லாஹ்வின் தூதரே! ஒருவரைத் தேவையற்றவராக்குவது எது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஐம்பது திர்ஹம்கள் அல்லது அதற்குச் சமமான தங்கம்' என்று கூறினார்கள்."