"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வின் (பெயரால்) அடைக்கலம் தேடுகிறாரோ, அவருக்கு அடைக்கலம் கொடுங்கள்; யார் அல்லாஹ்வின் (பெயரால்) உங்களிடம் கேட்கிறாரோ, அவருக்குக் கொடுங்கள்; யார் அல்லாஹ்வின் (பெயரால்) பாதுகாப்பு தேடுகிறாரோ, அவருக்கு பாதுகாப்பு கொடுங்கள். யார் உங்களுக்கு ஒரு உதவி செய்கிறாரோ, அதற்குப் பிரதியுபகாரம் செய்யுங்கள், உங்களால் (பிரதியுபகாரம்) செய்ய முடியாவிட்டால், அவருக்குப் பிரதியுபகாரம் செய்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் வரை அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.'"