அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், ஒருவர் திருமணம் செய்துகொண்டால் (அவருக்கு) வாழ்த்துத் தெரிவிக்கும்போது கூறுவார்கள்: (பாரகல்லாஹு லக வ பாரக அலைக்க, வ ஜமஅ பைனகுமா ஃபீ கைர்.) "அல்லாஹ் உனக்கு அருள்வளம் (பரக்கத்) செய்வானாக, மேலும் உன் மீது அருள்வளம் (பரக்கத்) பொழிவானாக, மேலும் உங்கள் இருவரையும் நன்மையில் ஒன்றிணைப்பானாக."